"இந்த' விஷயம் நடக்குறப்போ 'கொரோனா'வுல இருந்து"... முழுசா 'மீண்டு' வருவோம்... 'நம்பிக்கை' தெரிவித்த 'பில்கேட்ஸ்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா என்னும் கொடிய தொற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.

ரஷியா, இந்தியா உட்பட சில நாடுகள் கண்டுபிடித்த தடுப்பு மருந்துகள் சோதனை கட்டங்களில் நல்ல முடிவுகளை தந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்களிடம் எப்போது கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்கும் என்றும், சிகிச்சை முறை, தடுப்பு மருந்து ஆகியவற்றில் உள்ள முன்னேற்றம் மூலம் நாம் 2021 ஆம் ஆண்டுக்குள் இதிலிருந்து முழுவதுமாக வெளிவருவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், 'தடுப்பூசி மருந்தின் செயல்திறன் அதன் ஆரம்பகட்டத்தில் நோய் பரவலுக்கு எதிராக நீண்ட காலம் இருக்காது. சிறந்த தடுப்பூசியை உருவாக்க இன்னும் காலம் ஆகலாம். அதே வேளையில் சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றம் மூலம் இறப்பு விகிதத்தை குறைக்கவும் முடியும்' என்றும் தெரிவித்தார். பணக்கார உலக நாடுகள் மட்டுமில்லாமல் சிறிய உலக நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க அமெரிக்கா நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உலகெங்கிலும் 150 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் வெவ்வேறு கட்டங்களில் சோதனை முறையில் உள்ள நிலையில், இரண்டு டசனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் சோதனையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
