'ரொம்ப நாள் அவன் கூட வாழ முடியாதுல...' 'கலங்கும் காதலி...' - 61 வயது மூதாட்டியை திருமணம் செய்யும் 27 வயது இளைஞன்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 61 வயது மூதாட்டியும் 27 வயது இளைஞனும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
![australia 61 yr old women married 27 yr old boy friend australia 61 yr old women married 27 yr old boy friend](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/australia-61-yr-old-women-married-27-yr-old-boy-friend.jpg)
டெமுஜின் டெரா (27) என்ற இளைஞனும், ஜாக்வி ஹோவர்டு (61) என்ற மூதாட்டியும் வயது வித்தியாசத்தை கடந்து மகிழ்ச்சியாக இருக்கும் காதல் தம்பதி ஆவார்கள்.
இதுகுறித்து டெமுஜின் கூறுகையில், "ஜாக்வியின் நடன பள்ளிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் மாணவனாக சேர்ந்தேன்.
நாங்கள் குரு - சிஷ்யனாகவே முதலில் இருந்தோம். அதன் பின்னர் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் உணர்வை எங்களால் உணர முடிந்தது.
எங்களுக்குள் வயது வித்தியாசம் இருப்பதை அறிவோம், பொதுவாகவே வயதான பெண்களிடம் எனக்கு ஈர்ப்பு உள்ளது.
என் காதலிக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை" என கூறினார்.
ஜாக்வி கூறுகையில், "முதலில் நாங்கள் நண்பர்களாகவே இருந்தோம்.
பின்னர் நான் சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றேன், அங்கு டெமுஜின் பணியாற்றி வந்தார், அப்போது இருவரும் பேஸ்புக் மூலம் அதிகமாக பேசி கொண்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.
நான் திருமணமாகி கணவரை பிரிந்தவள் என என்னை பற்றி எல்லா விடயங்களையும் அவரிடம் கூறிவிட்டேன்.
என்னையும், டெமுஜினையும் பலரும் தம்பதி என்றே நம்பமாட்டார்கள்.
என் மகளும் டெமுஜினும் ஒரே வயதுடையவர்கள்,
என்னுடைய மகள் எங்கள் காதலை ஏற்று கொண்டுவிட்டாள். அவளுக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இருந்தது. காலாவதியான கலாச்சரா மனநிலையில் அவள் இல்லை.
நண்பர்கள், உறவினர்கள் பலரிடம் நாங்கள் தம்பதி என நிரூபிக்க அவர்கள் முன்னிலையில் முத்தம் பரிமாறிக் கொண்டோம். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை, டெமுஜினுக்கு முன்னரே இறந்து விடுவேன் என்பது தான் எனக்கு உள்ள ஒரே கவலை, ஏனெனில் என் வயது அப்படி" என கூறியுள்ளார். ஆனால் டெமுஜின் கூறுகையில், மரணம் யாருக்கு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)