'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'
முகப்பு > செய்திகள் > இந்தியாலடாக் எல்லையில் இந்திய வீரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்திய நிதி சேவைகள் வழங்கும் இணையதளங்கள் மீது சீனா அதி தீவிரமான சைபர் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இணையதளங்கள், வங்கி மற்றும் நிதி செலுத்தும் பேமென்ட் தளங்கள் மீது டிடிஓஎஸ் (Distributed denial of service) தாக்குதலை சீனா தொடுத்திருக்கிறது. டிடிஓஎஸ் தாக்குதல் என்பது சேவை மறுப்புத் தாக்குதல் என கூறப்படுகிறது. இணையதளம் மூலம் வழங்கப்படும் சேவைகளை அதன் பயன்பாட்டாளர்கள் அணுக முடியாத வண்ணம் முடக்கும் செலலே டிடிஓஎஸ் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
செயற்கை முறையில் அதீத இணையதள போக்குவரத்தை உருவாக்கி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த முடியாத வகையில் டிடிஓஎஸ் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை அரசு இணையதளங்கள், வங்கி சேவைகள், ஏடிஎம் பயன்பாடு ஆகியவற்றில் இந்த சைபர் தாக்குதலை சீனா தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சீனாவின் மத்திய நகரான செங்டுவிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில்தான் சீனா மக்கள் விடுதலை ராணுவத்தின் முக்கியத் தலைமையகம் அமைந்துள்ளது. இது சீன ராணுவத்தின் முதன்மையான இணையப் போர் பிரிவாகும்.
எனினும் சீனாவின் அனைத்து தாக்குதல்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. தகவல் திருட்டு, இணையதள முடக்கம் என பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்ட சீன ராணுவத்தின் சைபர் அட்டாக்குகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கும் இந்திய உளவுத்துறை அமைப்பு சீனாவுடன் நேரடியாக தொடர்புடைய 52 செயலிகளை முடக்க வலியுறுத்தியுள்ளது. ஜும் வீடியோ, டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர்இட், கிளீன்மாஸ்டர் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட வேண்டிய பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த 52 செயலிகள் மூலம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த சீனாவால் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி சேவைகளுக்கு ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவிலும் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் மோரிஸ் ஜான்சன் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
