“அவர் பாதத்தை பாருங்க.. அதுல”.. சுஷாந்த் சிங் வழக்கில் சூடு பிடிக்கும் மற்றுமொரு சர்ச்சை ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 12, 2020 02:47 PM

தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருப்பதாக பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

sushant singh rajputs ankle broken feet twisted subramanian swamy

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர். கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாதம் திருகப்பட்டிருப்பதாக பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், “சுஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த ஆர்.சி கூப்பர் நகராட்சி மருத்துவமனையின் ஐந்து மருத்துவர்களையும் சிபிஐ விசாரணை செய்வது சரியாக இருக்கும். சுஷாந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஆம்புலன்ஸ் வாகன ஊழியரின் கூற்றுப்படி சுஷாந்தின் கணுக்காலுக்கு கீழே உள்ள பாதம் முறிந்து திருகப்பட்டிருப்பது தெரியவருகிறது. உண்மைகள் வெளிவருகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணிய சுவாமியின் இப்பதிவு சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சர்ச்சையை மேலும் சமூக வலைகளில் மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sushant singh rajputs ankle broken feet twisted subramanian swamy | India News.