‘தடபுடலா நடந்த கல்யாணம்’.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. அதிரடி ‘ஆக்‌ஷனில்’ இறங்கிய அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 28, 2020 09:11 AM

கொரோனா விதிகளை மீறி தடபுடலாக நடந்த கல்யாணத்தில் கலந்து கொண்ட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man fined Rs6.26 lakh for inviting over 50 guests to wedding

ராஜஸ்தான் மாநிலம் பிஹீல்வாடா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனுக்கு கடந்த 13ம் தேதி தடலபுடலாக திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த திருமண நிகழ்ச்சிக்கு ஊரடங்கு விதிகளை மீறி 50-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் கொரோனா பரவ காரணமாக இருந்த மணமகனின் தந்தைக்கு பிஹீல்வாடா மாவட்ட ஆட்சியர் 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man fined Rs6.26 lakh for inviting over 50 guests to wedding | India News.