உருவபொம்மையுடன் 'திருமணம்'... 90 வயசு அப்பாவோட 'கடைசி' ஆச... எனக்கு வேற வழி தெரியல 'ஆத்தா'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jun 19, 2020 07:02 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவருக்கு மரத்தால் செய்யப்பட்ட உருவ பொம்மையுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Man marries wooden effigy to fulfil father’s wish

இந்த வினோத திருமணத்திற்கு பின் இருக்கும் காரணத்தை திருமணம் செய்த நபரின் தந்தையே கூறியுள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவ் மோகன் என்பவருக்கு மொத்தம் 9 ஆண் பிள்ளைகள். இதில் எட்டு மகன்களுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் தனது கடைசி மகனுக்கு தான் இந்த வினோத திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்ட உருவபொம்மையின் அருகில் மணமகன் அமர, திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. தனது கடைசி மகனின் வினோத திருமணம் குறித்து 90 வயதான ஷிவ் மோகன் கூறுகையில், 'நான் இறப்பதற்கு முன் எனது 9 மகன்களின் திருமணத்தையும் நடத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனது கடைசி மகனுக்கு சொத்து எதுவுமில்லை. அது மட்டுமில்லாமல் அவன் அறிவாளி ஆகவும் இல்லாமல் இருந்ததால் தான் அவனுக்கு இந்த வினோத திருமணத்தை செய்ய நேரிட்டது' என தெரிவித்தார்.

உருவபொம்மையுடன் வாலிபருக்கு நடைபெற்ற திருமணத்தில் அந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man marries wooden effigy to fulfil father’s wish | India News.