'6 மாசமா.. கொரோனாவுக்கே டிமிக்கி குடுத்துட்டு வர்றோம்!'.. ‘ஸ்ட்ரிக்டா’ இருந்து ‘மாஸ்’ காட்டி வரும் ‘நாடு!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் 2-வது அலை சில ஐரோப்பிய நாடுகளை தாக்கியுள்ள நிலையில், பிரான்சிலும், ஜெர்மனியிலும் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தினமும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தாக்க செய்கிறது. இந்நிலையில், சீன குடியரசு நாடான தைவானில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் கொரோனா தொற்று புதிதாக யாருக்கும் ஏற்படவில்லை. முன்பாக 553 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், 7 பேர் உயிரிழந்திருந்தனர்.
ஆனால் கடந்த 200 நாட்களில் யாருக்குமே தொற்று ஏற்படவில்லை. எனினும் கட்டுப்பாட்டுடன் இருந்த தைவான், சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாகிய அந்த ஜனவரி மாதமே தனது எல்லைகளை மூடியது. அத்துடன் பயணங்களை ஒழுங்குபடுத்தி, எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளையும், நிபுணர்களின் விதிமுறைகளையும் நிறுத்தாமல் கடைபிடித்து வருகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் தொடர்புடைய 150 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டது, அரசு முகக்கவசங்கள் ர்ன தைவான் ஸ்ட்ரிக்டாக இருந்தும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு கொரோனா தொற்றால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உள்ளூரில் கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை.