"கொரோனாவையும் சமாளிச்சுக்கலாம்.. ஹெட்போனாவும் பயன்படுத்தலாம்!".. 'அசத்தல்' ஐடியாவுடன் 'ஸ்மார்ட் மாஸ்க்போன்!'.. அப்படி என்ன இருக்கு?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Siva Sankar | Sep 24, 2020 03:56 PM

கோவிட் -19 தொற்றுநோயினால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் அனைவரும் முகமூடி அணிந்து கொள்வது  வழக்கமாகிவிட்டது.

Bluetooth face mask with a built in microphone called maskphone

ஆனல் மாஸ்க் அணிவதால், சில நேரங்களில் வையர்டு இயர்போன்கள் அல்லது ஏர்போட்கள் போன்ற உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில் சின்ன சின்ன சிக்கல்கள் உண்டாவதாக பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக மாஸ்க்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

மாஸ்க்குடன் இணைக்கப்பட்ட மைக்ரோஃபோன் என்கிற இந்த சாதனம் மூலம் பயனாளர்கள் பாடல் கேட்பது, திடீரென வரும் போன் கால்களை அட்டென் செய்து பேசுவது, உள்ளிட்ட பயன்களை பெற முடியும். இந்த மாஸ்க், ஐபிஎக்ஸ் 5 வாட்டரண்ட் மற்றும் துவைத்து பயன்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. பாடல்கள் கேட்கும்போது பாடலை நிறுத்தவும், மீண்டும் ஒலிக்கவும் பயன்படும் விதமாக மாஸ்க்கின் ஓரத்தில் வலதுபக்கம் 3 பொத்தான்கள் அளிக்கப்பட்டுள்ளன.

Bluetooth face mask with a built in microphone called maskphone

இதில் உள்ள அலெக்ஸா வசதி, கூகுள் அசிஸ்டன் போன்ற வாய்ஸ் ரிக்கக்னைஸ் வசதிகளை பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. இதன் தயாரிப்பு விலை 49 டாலர் (ரூ .3,600)  என்கிற அளவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹைடெக் மாஸ்க்போனின் நிறுவனர் டினோ லால்வானி இதுபற்றி பேசியபோது, “உலகளாவிய தொற்றுநோய்களுக்கு மக்களுக்கு வசதியாகவும் சவுகரியமாகவும் உதவும் சாத்தியங்களுடன் உருவாகியுள்ள ஒரு ஸ்மார்ட் தீர்வு” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bluetooth face mask with a built in microphone called maskphone | Technology News.