'எனக்கும் எனக்கும் கல்யாணம்...' 'இது என்னடா புதுசா இருக்கு...' 'மோதிரம் போட்டதெல்லாம் வேற லெவல்...' - அடுத்தது நடந்தது தான் செம ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த 35 வயது பெண்மணி ஒருவர் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்தும் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![america 35 year old nicole tie knot herself divorce america 35 year old nicole tie knot herself divorce](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/america-35-year-old-nicole-tie-knot-herself-divorce.jpg)
அமெரிக்காவின் மாசாச்சூசெட்ஸ் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான நிக்கோல் ருஸ்ஸோ, இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு தன் காதலர் பாலோ டீ சௌச உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு நிக்கோல் மற்றும் பாலோ ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் விரக்தியிலும், மன அழுத்தத்தில் இருந்த நிக்கோல் ருஸ்ஸோ, தன்னை தானே திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். பின் 2014-ஆம் ஆண்டு நிக்கோல் மணமகள் போல் அலங்காரம் செய்துகொண்டு, கண்ணாடி முன் நின்று மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணமும் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து தன் முன்னாள் காதலர் பாலோவை கண்ட நிக்கோல் மீண்டும் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். அதனால் நிக்கோல் தற்போது தனது முந்தைய திருமணத்தை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்து, தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னால் பாலோவுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய நிக்கோல், ' என்னுடைய சுய திருமணம், எனது நம்பிக்கையையும் சுயமரியாதையையும் மேம்படுத்தி, என் பாதுகாப்பின்மைகளை எதிர்த்துப் போராட உதவியது. நான் என்னை மிகவும் மதித்தேன். இப்போது பாலோவிடம் அதை காண்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)