'பளபளனு இருக்கு.. அத்தனையும் புதுநோட்டு!'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்!'.. 'வீட்டுக்கு' போனதும் தெரியவந்த 'ஷாக்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரூபாய் நோட்டுகளுக்குள் போலி ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொடுத்து ஏமாற்றிய சம்பவம் அவிநாசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர்கள் ஆல்வின் ராய் எனும் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துவரும் நபர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர். இருவரும் கோவை மாவட்டம் சூலூர் பட்டணம் பகுதியில் வசித்து வரும் ஆல்வினின் தோழி கிருபாவின் மூலம் ஆச்சாரியா என்பவரிடமிருந்து, சொத்தின் பேரில் ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளனர். அவரும் கடன் தர ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவிநாசி கோவை பைபாஸ் ரோட்டில் வைத்து பணப்பரிமாற்றம் நடத்தியுள்ளனர்,
ஆனால் ஒரு கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஆவன கட்டணமாக 4 லட்சம் ரூபாயை முன்பணமாக ஆச்சாரியார் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் முதல் தவணையாக 55 லட்சம் ரூபாய் ஆச்சாரியா வழங்கியுள்ளார். அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தபோதுதான் அதில் 11 ஆயிரம் மட்டுமே அசல் இருந்ததும் மற்ற அனைத்தும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதும் ஆல்வின்ராய்க்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் அவிநாசி போலீசில் புகார் கொடுத்துள்ளார், சினிமாவை மிஞ்சும் இந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.