இப்படி நடந்துருக்க கூடாது... "என்னால இத நம்பவே முடியல"... 'டிரம்பை' கடுமையாக 'வாட்டி' எடுத்த 'துயரம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 16, 2020 02:14 PM

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு மொத்தம் இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

america president donald trump brother robert trump dies at 71

இதில் ராபர்ட் டிரம்ப், டொனால்டு டிரம்பின் இளைய சகோதரர் ஆவார். 71 வயதான ராபர்ட் டிரம்ப் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், டிரம்ப்பின் தொழில்நிறுவனங்களில் முக்கிய பொறுப்பையும் வகித்து வந்தார். இதற்கிடையில், உடல்நிலை காரணமாக அவதிப்பட்டு வந்த ராபர்ட் டிரம்ப், நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

america president donald trump brother robert trump dies at 71

இவரை அதிபர் டிரம்ப் அடிக்கடி மருத்துவமனை சென்று சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ராபர்ட் டிரம்ப் இன்று உயிரிழந்தார். இளைய சகோதரரின் மறைவால், அதிர்ச்சியில் உறைந்த டிரம்ப், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். america president donald trump brother robert trump dies at 71

சகோதரன் மறைவு குறித்து டிரம்ப் கூறுகையில், 'ராபர்ட் எனது சகோதரன் மட்டுமல்ல. எனது சிறந்த நண்பனும் கூட. அவரை பெரிதும் தவற விடுகிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் சந்திப்போம். என்னுடைய மனதில் என் சகோதரரின் நினைவுகள் எப்போதும் இருக்கும்' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. America president donald trump brother robert trump dies at 71 | World News.