நேற்று சல்மான் கான்... இன்று பிரபல பாடகியை முகத்திலேயே கடித்த பாம்பு..!- வைரல் காட்சி
முகப்பு > செய்திகள் > உலகம்நேற்று சல்மான் கானை பாம்பு கடித்த விஷயம் நாடு முழுவதும் வைரல் ஆனது. இந்த சூழலில் இன்று பிரபல பாடகி ஒருவரை முகத்திலேயே பாம்பு கடிக்கும் காட்சி சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
![after salman khan a famous singer gets bitten by snake after salman khan a famous singer gets bitten by snake](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/photo-after-salman-khan-a-famous-singer-gets-bitten-by-snake.jpg)
பாலிவுட் நடிகர் சல்மான் கானை நேற்று அவரது பண்ணை வீட்டில் பாம்பு ஒன்று கடித்துவிட்டது. விஷம் இல்லாத பாம்பு கடித்தது என்றும் தான் இப்போது நன்றாக தேறிவிட்டதாகவும் சல்மான் கான் அறிவித்துவிட்டார். ஆனாலும், அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக சமுக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் இன்று பிரபல பாப் பாடகி ஒருவரை படப்பிடிப்புத் தளத்தில் முகத்திலேயே பாம்பு ஒன்று கடித்துள்ளது. பிரபல அமெரிக்க பாப் பாடகி ஆக இருப்பவர் 21 வயது மேத்தா. இவரது பாப் இசை வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவர் தனது இசை ஆல்பத்துக்காக பாம்புகள் பல சூழ ஒரு வீடியோவை படம் பிடித்து வந்துள்ளார்.
அப்போது அவரது உடலில் 2 அல்லது 3 பாம்புகள் விடப்படுகின்றன. அதில் கறுப்பு நிறத்திலான பாம்பு ஒன்று நேராக மேத்தாவின் தாடை பகுதியில் கடித்துவிடுகிறது. வலியில் அந்த பாம்பை பிடித்து எறிந்துவிடுகிறார் மேத்தா. பாம்பிடம் கடி வாங்கும் வீடியோவை மேத்தாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பதிவில், “உங்களுக்காக வீடியோ எடுக்க நான் என்னவெல்லாம் ஆகிறேன் பாருங்கள்!” என்றும் “இனிமேல் இது கிடையாது!” என்றும் கேப்ஷன்கள் போட்டுள்ளார்.
மற்றொரு புறம் இன்று தனது 57-வது பிறந்தநாளைக் கொண்டாடும் சல்மான் கானை நேற்று அவரது வீட்டில் பாம்பு தீண்டியது. சுமார் 6 மணி நேர மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இன்று தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளார் சல்மான் கான்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)