‘கேரள அழகிகள் உயிரிழப்பு’.. விபத்துக்கு இதுதான் காரணமா..? பகீர் கிளப்பிய புதிய ஆதாரம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாடல் அழகிகள் 2 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்றவர் அன்சீ கபீர். இதே அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் அஞ்சனா ஷாஜன். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி நள்ளிரவு அன்சீ கபீர், அஞ்சனா ஷாஜன் மற்றும் அவர்களது நண்பர் முகமது ஆசிக் ஆகியோர் பாலாரிவட்டத்திலிருந்து இடப்பள்ளி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் கேரளா அழகிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் டிரைவர் அப்துல் ரகுமான் மற்றும் ஆண் நண்பர் முகமது ஆசிப் மற்றும் உயிர்தப்பினர். அதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த முகமது ஆசிக் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிரைவர் அப்துல் ரகுமானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து டிரைவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொச்சியில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் அக்டோபர் 31-ம் தேதி கேரள அழகிகள் இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விசாரணை நடத்திய போது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின் உரிமையாளர் ராய் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கேரள அழகிகளை சைஜு என்பவர் ஆடி காரில் பின் தொடர்ந்து சென்றதும் விபத்து ஏற்பட்டவுடன் அந்த காரை பார்த்துவிட்டு மீண்டும் ஆடி காரில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சைஜுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓட்டலில் நடந்த பார்ட்டியில் அழகிகளுக்கும், ஹோட்டல் உரிமையாளர் ராய் ஜோசப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் கேரள அழகிகள் அங்கிருந்து காரில் வேகமாக சென்றுள்ளனர்.
பார்ட்டி நடந்த அன்று கேரள அழகிகள் இருவரையும் ஹோட்டலில் தங்க வைக்க ஓட்டல் உரிமையாளர் ராய் ஜோசப் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் கோபமாக காரில் சென்றதும், சைஜூ ஆடி காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
தங்களை பின்னால் ஆடி கார் ஒன்று வேகமாக பின்தொடர்வதை பார்த்ததும் கேரள அழகிகளின் கார் டிரைவர் வேகமாக சென்றுள்ளார். அதனால்தான் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆடி பின்னல் துரத்தி வந்ததாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சைஜூ மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ராஜ் ஜோசப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.