'கோவா ட்ரிப் முடிந்து வீட்டுக்கு வந்த நேரம்'... 'போன வேகத்தில் பல்டி அடித்து கவிழ்ந்த கார்'... 'வெளிய எடுக்கும் போது தான் தெரியும்'... உள்ள இருந்தது இவங்களா'?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 22, 2021 10:35 AM

கோவாவில் விடுமுறையை முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பிய நிலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

Actor Ishwari Deshpande die in tragic accident after their car falls

இந்தி மற்றும் மராத்தி திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. படப்பிடிப்பில் ஈஸ்வரி பிசியாக இருந்த நிலையில் அவர் நடிப்பில் இரண்டு படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அவருக்குப் படப்பிடிப்புக்கு இடையே விடுமுறை கிடைத்தது. இதனால் அவர் கோவாவுக்குச் செல்ல முடிவு செய்து காரில் சென்றுள்ளார்.

Actor Ishwari Deshpande die in tragic accident after their car falls

தனது நீண்ட நாள் காதலரான ஷூபம் டெட்ஜ்யை ஈஸ்வரி விரைவில் திருமணம் செய்யவுள்ள நிலையில், அதற்கு ஈஸ்வரியின் பெற்றோரும் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள். இந்நிலையில் தங்களது விடுமுறையைக் கழிக்க இருவரும் கோவா சென்று விட்டுத் திரும்பிய நிலையில், கோவாவின் அர்போரா (Arpora) பகுதியில் அதிகாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

Actor Ishwari Deshpande die in tragic accident after their car falls

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் பல்டி அடித்து அருகிலிருந்த நீர் நிலைக்குள் விழுந்து மூழ்கியது. இந்த கோர விபத்தில் ஈஸ்வரி மற்றும் அவருடன் பயணித்த 28 வயதான அவரது காதலன் ஷூபம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

Actor Ishwari Deshpande die in tragic accident after their car falls

இதற்கிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நள்ளிரவு விருந்துக்குச் சென்று திரும்பி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதற்கு அடையாளமாக அவர்களது கை மூட்டுகளில் Wristband உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Ishwari Deshpande die in tragic accident after their car falls | India News.