எமனாய் வந்த நாய்... சாலையில் உருண்ட காவலர்... சாமியாய் காப்பாற்றியது 'இது'தாங்க..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையில் திடீரென குறுக்கே ஓடி வந்த நாய் ஒன்றால் போலீஸ் காவலர் விபத்துக்குள்ளானார். அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த ஒரே காரணத்தால் அந்த விபத்தில் உயிர் தப்பினார்.
சாலைகளில் தெரு நாய்களும் மாடுகளும் சுற்றித்திரிந்து பல வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் தொடர்ந்து பல இன்னல்களை தந்து வருகின்றன. இந்த வகையில் திருச்சியில் இருவழிச் சாலையில் நாய் ஒன்று திடீரென புகுந்து பைக் ஒன்றின் மேல் மோதியதில் பைக் ஓட்டி வந்த ஆயுதப்படை போலீஸ் காவலர் ஒருவர் நிலைதடுமாறி உருண்டு சாலையில் கீழே விழுந்தார்.
தீடிரென சாலையின் மறுபுறம் இருந்து ஓடி வந்த நாய் இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் வந்து மோதுகிறது. இதன் வேகத்தால் நிலைகுலைந்த பைக் சாலையில் விழுந்து உராய்ந்து கொண்டே சரிகிறது. தலைகுப்புற விழும் ஆயுதப்படை போலீஸ் காவலர் சில தூரம் உருண்டு புரண்டு விழுகிறார்.
தலைகவசம் அணிந்து இருந்த ஒரே காரணத்தால் அந்த ஆயிதப்படை காவலர் லேசான காயங்கள் உடன் உயிர் பிழைத்தார். அவர் விழுந்து உருண்ட வேகத்தில் அவர் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட் தெறித்து உருண்டு செல்கிறது. அதே வேகத்தில் காவலரும் எழுந்து சுதாரித்து உட்கார்ந்து கொண்டார்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு தலை, முகத்தில் காயம் இல்லை. கை, கால்களில் மட்டும் சில சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த நாய் விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலையில் இருந்து ஓடிவிட்டது. இது இங்கு மட்டும் இல்லை தமிழ்நாட்டின் பல சாலைகளிலும் இந்த தெரு நாய்களால் பைக், கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடுமையான விபத்துகளையும் பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர்.