பவணிக்கு இப்போ எப்படி இருக்கு...? 'இறந்த தோழியைப் பற்றி கேட்ட யாஷிகா ஆனந்த்...' - மகளின் 'உடல்நிலை' குறித்து உருகிய அம்மா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமையன்று நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) மாமல்லபுரம் அருகே அதி வேகமாக கார் ஓட்டிச் சென்றதில், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆவார். அதோடு மட்டுமல்லாமல், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்தும், அவருடன் காரில் பயணித்த இரு ஆண் நண்பர்களும் உடனடியாக அருகேயுள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல், அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தின் உடல்நிலை பற்றி அவருடைய அம்மா சோனல் ஆனந்த் கூறியிருப்பதாவது, “யாஷிகா ஆனந்த் தற்போது நலமாக இருக்கிறார். இடுப்பு, கால், மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி, இன்னும் யாஷிகாவிற்கு தெரியாது. ஆனால், பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டரில் வைத்துள்ளதாக கூறியிருக்கிறோம்.
மருத்துவர்கள் இப்போதைக்கு இதுகுறித்து யாஷிகாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். சிகிச்சை நல்லபடியாக முடிந்து மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், இரண்டு மாதம் கழித்து தான் அவரால் எந்திரித்து நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
