'இப்படி போய் குட்டிக்கரணம் போடவா என்ன ஓவர் டேக் பண்ணி போன'.... 'நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காரை முந்தி செல்ல முயன்ற போது நடந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த வேர்கிளம்பியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனது சகோதரி மற்றும் குழந்தையுடன் அதங்கோடு பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில் முன்னே சென்ற காரை அவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது திடீரென எதிரே ஒரு கார் வந்துள்ளது.
இதையடுத்து அந்த காரின் மீது மோதாமல் இருக்கத் தான் வந்த காரை வேகமாகத் திருப்பிய நிலையில், அது கட்டுப்பாட்டை இழந்து வந்த வேகத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அனில்குமார் மேம்பாலத்தின் மீது அதிக வேகத்தில் சென்றது தான் விபத்துக்குக் காரணம் என வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.
இதனை அனில்குமார் முந்தி சென்ற காரின் வந்து கொண்டிருந்த ஒருவர் எதேச்சையாக எடுத்த வீடியோவில் முழு விபத்தும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The only outcome of rash driving..🤦🏾♂️🤦🏾♂️ pic.twitter.com/n4FSSKW5B0
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) June 14, 2021

மற்ற செய்திகள்
