கொரோனா வைரஸை வென்ற 96 வயது பாட்டி...! 'அட்மிட் பண்ணினப்போ பயங்கர ஃபீவர் இருந்துச்சு...' முழுமையாக குணமடைந்ததாக தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Mar 27, 2020 11:40 AM

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட தென்கொரியாவை சேர்ந்த 96 வயது பாட்டி குணமடைந்த தகவல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

A 96-year-old granny was infected with corona virus has recovered

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது வரை 199 உலக நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸ் தொற்றால் இதுவரை  532,263 பாதிக்கப்பட்ட நிலையில் 24,090 உயிரிழந்துள்ளனர். மேலும் 124,349 மக்கள் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் ஒருவர் தான்  தென்கொரியாவை சேர்ந்த 96 வயதுடைய ஹூவாங் என்னும் பாட்டி. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது பயங்கரமான காய்ச்சலும், உடலில் தீக்காயங்களும் இருந்துள்ளது. கொரோனா வைரஸ் பெரும்பாலும் முதியவர்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்றும், இந்த வைரஸ் தாக்கியவர்களின் இறப்பு விகிதத்தில் முதியவர்கள் தான் அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தென்கொரியாவின் தெற்கு பகுதி, டியாகு  நகரைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி தீவிர சிகிச்சைக்கு பின் நல்ல உடல் நலத்துடன் வீட்டிற்கு திரும்ப வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் தற்போது தனிமைப்படுத்தபட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS