‘உள்ள போனா தற்கொலை பண்ணிப்பேன்’.. டாஸ்மாக் முன்பு கத்தியுடன் அமர்ந்த பெண்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 28, 2019 05:52 PM

டாஸ்மாக்கிற்குள் யாரேனும் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பெண் ஒருவர் மதுபானக்கடைக்கு முன்பு கத்தியுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Kavitha protest against TASMAC bar in tirupur

திருப்பூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் கவிதா என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கவிதா அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவருகிறார்.

இந்நிலையில் பாண்டியன் நகரில் உள்ள மதுபானைக் கடையின் முன்பு கையில் கத்தியுடன் அமர்ந்து கொண்டு  ‘யாராவது டாஸ்மாக் உள்ளே போனால் இங்கேயே கையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன்’ என கவிதா போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அதிகாலை 5 மணிக்கே திறந்து விடுவதால் தனது கணவர் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமால் இருப்பதால் தன் குழந்தைகளை படிக்க வைப்பது தொடங்கி அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டபடுவதாக கவிதா தெரிவித்தார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கவிதாவின் கையில் இருந்த கத்தியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TIRUPPUR #TASMAC #WOMAN #PROTESTS