'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Jeno | Sep 05, 2019 02:12 PM

கூகுள் மேப் பயனாளர்களுக்கு அது கொடுத்திருக்கும் புதிய அப்டேட் பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Google Maps finally received Street View layer on Android

புதிய இடங்களுக்கு செல்பவர்கள் மற்றும் கேப் ஓட்டுனர்கள் என பலருக்கும் பெரும் உதவியாக இருப்பது  கூகுள் மேப். தற்போது அதன் ஸ்ட்ரீட் வியூ மேப்பை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சரியான இடத்தை சென்று சேருவதற்கு வர்த்த நிறுவனங்களுக்கு பெரும் உதவி செய்கிறது. இதனிடையே ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக தத்ரூபமான காட்சிகளைகளையும் காணும் வகையில் புதிய மேப் அப்டேட்டை கொடுத்துள்ளது.

அதன்படி கூகுள் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிச்சயம் பயனாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில் தெருவில் இருக்கும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் , நாம் செல்ல வேண்டிய இடங்களையும் புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள இந்த மேப் மூலம் எளிமையாக காண முடியும். மேலும் ஸ்ட்ரீட் வியூ மேப்பில் ஏராளமான வசதிகளும் இடம் பெற்றுள்ளது. இதில், நமக்கு தேவைப்படும் பட்சத்தில், அந்த வசதிகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஐஓஎஸ் பயனர்களுக்கு இது இன்னும் வெளியிடப்படாத நிலையில், அவர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என கூகிள் தெரிவித்துள்ளது.

Tags : #GOOGLE #APPLE #GOOGLE MAPS #STREET VIEW LAYER #ANDROID