பிசிசிஐ-யின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Oct 14, 2019 10:24 AM
பிசிசிஐ-யின் புதிய கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

47 வயதான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது பிசிசிஐயின் தலைவர் மற்றும் இன்னும் பிற தலைவர்களுக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் கேப்டனாக இருந்த கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வாரிய தலைவரான சீனிவாசன், தலைவர் பதவிக்கு பிரிஜேஷ் படேல் பெயரை முன்மொழிந்த போதிலும், அவருக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. தலைராக கங்குலியை, தேர்வு செய்ய பெரும்பான்மையான நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Tags : #SOURAVGANGULY #BCCI
