‘ஹேக்கர்ஸ் ஈசியா ஹேக் பண்ணிருவாங்க’.. சீக்கிரம் அந்த ‘ஆப்’ப அப்டேட் பண்ணுங்க.. அலெர்ட் செய்த பிரபல நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க கூகுள் குரோம் செயலியை சீக்கிரமாக அப்டேட் செய்துகொள்ளுங்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் தினமும் உபயோகிக்கும் ஒரு செயலி எதுவென்றால், கூகுள் நிறுவனத்தின் குரோம் செயலியை குறிப்பிடலாம். பல கோடி பயனர்கள் பயன்படுத்தும் இந்த செயலியில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக ஹேக்கர் எளிதாக ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக கணினி மற்றும் மேக் பயன்படுத்துவோர் உடனடியாக அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது உள்ள வெர்ஷன் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், பயனர்களின் பாதுகாப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : #GOOGLE #CHROME #UPDATE
