செம ஷாக்! 'இந்தியாவா' அப்டினா என்ன?... அது எங்க இருக்கு?... போட்டிபோட்டு 'தேடுனது' யாருன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2 நாட்களாக அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். அவர் தங்கப்போகும் ஹோட்டல், சுற்றிப்பார்த்த இடங்கள், சாப்பிடும் உணவுப்பொருட்கள் என சகலமும் ட்ரெண்டாகி வருகிறது. அதிலும் சச்சினை அவர் சூ-சின் என உச்சரித்தது பயங்கர வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அமெரிக்கர்கள் கூகுளில் போட்டிபோட்டு தேடிய தகவல்கள் அதிர்ச்சி அளித்துள்ளன. அதில் அவர்கள் தேடிய தகவல்கள் அனைத்தும் வேற லெவல். இதில் அதிகமான பேர் இந்தியா என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? என தேடி இருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருப்பவர்கள் தான் இந்த கேள்வியை அதிகம் கேட்டு கூகுளை திணறடித்து இருக்கின்றனர்.
இதையடுத்து இந்திய பிரதமர், தாஜ்மஹால், தாஜ்மஹாலில் இவாங்கா ஆகியவற்றை அமெரிக்கர்கள் அதிகம் தேடி இருக்கின்றனர். இதில் இந்தியா என்றால் என்ன? என்று அமெரிக்கர்கள் தேடியது தான் பெரிய ஷாக்காக இருக்கிறது.
நல்லா தேடுனீங்க போங்க?