'இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல'... இந்திய வீரர்களை 'வறுத்தெடுத்த' ரசிகர்கள்... 'நல்லா' ஆடுனவங்களுக்கே 'இந்த' நெலமையா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 26, 2020 03:15 PM

முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளதால், அதில் கண்டிப்பாக இந்திய அணி வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

\'Stop Posing and Start Playing\' - Twitter lashes out at Indian Players

இந்த நிலையில் வருகின்ற 29-ம் தேதி சனிக்கிழமை காலை 4 மணிக்கு 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச்சில் தொடங்கவுள்ளது. இதையொட்டி இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் வெலிங்டனில் இருந்து கிறிஸ்ட் சர்ச்சுக்கு சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் வழியில் விராட் கோலி, ரிஷப்  பண்ட், மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகிய நால்வரும் இணைந்து எடுத்த புகைப்படமொன்றை மயங்க் அகர்வால், இஷாந்த் சர்மா இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இதைப்பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டன்ட் ஆக பொங்கியெழுந்து விட்டனர். இந்த மாதிரி போஸ் கொடுப்பதை விட்டுவிட்டு ஒழுங்காக விளையாடுங்கள், இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல, விளையாட போனீர்களா? இல்லை ஊர் சுற்றிப்பார்க்கவா? என ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடிய, இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோல மயங்க் அகர்வாலும் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் 92 ரன்கள் எடுத்திருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால் இருவரையுமே ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை கோலி இந்த போஸ்டை போட்டிருந்தா?