2019 முழுக்க இந்தியர்கள் .. விழுந்து,விழுந்து.. கூகுள்ல 'தேடுனது' இதத்தானாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 11, 2019 05:35 PM
ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் எந்த விஷயங்களை அதிகமாக தேடினர் என்பது குறித்த விவரங்களை கூகுள் வெளியிடும். அந்தவகையில் இந்த வருடம் முழுக்க இந்தியர்கள் எந்தெந்த விஷயங்களை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் 2019-ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள்
1. உலகக்கோப்பை 2. லோக்சபா தேர்தல் 3.சந்திராயன் 2 4. கபீர் சிங் 5. அவெஞ்சர் எண்டு கேம்
அதிகம் தேடப்பட்ட கேள்விகள்:
1. 370 என்றால் என்ன? 2. எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு என்றால் என்ன? 3. கருந்துளை என்றால் என்ன? 4. ஹவுடி மோடி என்றால் என்ன? 5. இ-சிகரெட் என்றால் என்ன?
அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்:
1. அபிநந்தன் வர்த்தமான் 2. லதா மங்கேஷ்கர் 3. யுவராஜ் சிங் 4. ஆனந்த் குமார் 5. விக்கி கவுஷல்
அதிகம் தேடப்பட்ட படங்கள்:
1.கபீர் சிங் 2. அவெஞ்சர் எண்டு கேம் 3. ஜோக்கர் 4. கேப்டன் மார்வெல் 5. சூப்பர் 30 6. மிஷன் மங்கள் 7. கல்லி பாய் 8. வார் 9. ஹவுஸ்புல் 4 10. உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.