நீங்களே 'அந்த' கம்பெனி 'மொபைல' யூஸ் பண்ணலாமா?.. மாட்டிக்கொண்ட 'இந்திய' CEO !

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Manjula | Nov 18, 2019 10:43 PM

ரியல்மீ போனின் இந்திய சிஈஓ பிரபல நிறுவனத்தின் மொபைல் போனை யூஸ் செய்து கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்.

Realme India CEO caught using an iPhone, says was testing the flagship

பொதுவாக மொபைல் நிறுவனங்களை பொறுத்தவரையில் தங்களின் பிராண்ட் அம்பாஸிடர்கள், சிஈஓக்கள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்கள் கம்பெனி மொபைலை பயன்படுத்த வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். எனினும் அவ்வப்போது ஐபோன்களை பயன்படுத்தி விளம்பர தூதர்கள், சிஈஓக்கள் மாட்டிக்கொள்வது அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் இந்திய ரியல்மீ நிறுவனத்தின் சிஈஓ மாதவ் சேத் ரியல்மீ தொடர்பான விளம்பரம் ஒன்றிற்கு ஐபோன் மூலம் ட்வீட் செய்து மாட்டிக்கொண்டு இருக்கிறார். கடந்த நவம்பர் 16 அன்று அவர் தங்களது மொபைல் போன் அப்டேட் குறித்து வெளியிட்ட ட்வீட்டானது ஐபோன் மூலம் பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சில மணி நேரங்களிலேயே அவரது ட்வீட் Delete செய்யப்பட்டு விட்டாலும், ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவரே இவ்வாறு வேறொரு நிறுவனத்தின் மொபைல் போன்களைப் பயன்படுத்தி ட்வீட் செய்திருப்பது கண்டு நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

 

Tags : #SMARTPHONE