‘இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி சலுகை’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 27, 2019 04:27 PM

வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது BSNL நிறுவனம்.

BSNLs new prepaid plans for Rs 96 and Rs 236 10 GB data per day

கடந்த சில காலமாகவே மந்த நிலையில் இயங்கிவந்த BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. பிற பிரபல நிறுவனங்கள் தரும் சலுகைகளால் தங்களது வாடிக்கையாளர்கள் பலர் அவற்றிற்கு மாறுவதைத் தொடர்ந்து BSNL நிறுவனம் ரூ.96 மற்றும் ரூ.236க்கு 2 புதிய பிளான்களை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 28 நாட்களுக்கு 280 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். அதேபோல ரூ.236-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 10 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு 840 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Tags : #BSNL #OFFER #DATA #SMARTPHONE #RECHARGE #10GB