ஆன்லைன்ல.. மொபைல் ஆர்டர் பண்ண பாஜக எம்பி.. ஆனா வந்தது 2 மார்பிள் கல்லு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 29, 2019 10:09 PM

ஆன்லைனில் மொபைல் ஆர்டர் செய்த பாஜக எம்பிக்கு மார்பிள் கற்களை அந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

BJP MP orders mobile phone online, finds marble stones inside package

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மல்டா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காகென் முர்மு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் சாம்சங் மொபைல் போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். நேற்று அவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அவருக்கு ஆன்லைன் டெலிவரி  வந்தது.

அவரது மனைவி கையெழுத்து போட்டு ரூபாய் 11,999 பணம் கொடுத்து பார்சலை வாங்கி வைத்துள்ளார். வீட்டுக்கு வந்த முர்மு பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் சாம்சங் மொபைலுக்கு பதிலாக ரெட்மி மொபைல் கவர் இருந்துள்ளது. தொடர்ந்து பார்சலை பிரித்து பார்த்தவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

பார்சல் உள்ளே 2 மார்பிள் கற்கள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முர்மு அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் நுகர்வோர் நலத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து நிச்சயம் புகார் அளிப்பேன் என்றும் முர்மு தெரிவித்துள்ளார்.