ரூ.599-க்கு 'ரீசார்ஜ்' பண்ணா...ரூபாய் '4 லட்சத்துக்கு' இது இலவசம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Sep 23, 2019 05:14 PM
தொழில் போட்டியை தக்கவைத்துக்கொள்ள நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை டெலிகாம் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பொன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டத்தில் ரூபாய் 599-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா,100 எஸ்எம்எஸ்,அன்லிமிடெட் கால்கள் இவற்றுடன் சேர்த்து இன்சூரன்ஸ் பாலிசி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.இதன்படி பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டிற்கான இலவச பாலிசி வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுமாம்.
இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.3 மாதங்களுக்கு ஒருமுறை வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்யும்போது இன்சூரன்ஸ் பாலிசி தானாகவே ரெனிவ் ஆகுமாம்.தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இது கிடைக்கிறது.தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் ஒரு தனி கூட்டு நிறுவனத்தை ஏர்டெல் தொடங்கியுள்ளது.முதல்முறை வாடிக்கையாளர் பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸில் பதிவு செய்து கொள்ளும் போது, வாடிக்கையாளர் முதலில் எஸ்எம்எஸ்,ஏர்டெல் தேங்க்ஸ் செயலி அல்லது ஏர்டெல் சில்லறை விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முதல்முறை நீங்கள் ரீசார்ஜ் செய்தபின் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாக தகவல் வரும்.ஏர்டெல் தேங்ஸ் செயலி அல்லது அருகில் உள்ள ஏர்டெல் சில்லறை விற்பனை நிலையத்தில் நீங்கள் இந்த பாலிசியை பதிவு செய்து கொள்ளலாம்.இதற்கு எந்தவிதமான மருத்துவ பரிசோதனை தகவல்களும் தேவையில்லை.18-54 வயதுடைய எந்தவொரு வாடிக்கையாளரும் இந்த பாலிசியை எடுத்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்கள் உங்களுக்கு டிஜிட்டல் வடிவமாக அனுப்பி வைக்கப்படும், காகித வடிவில் தேவைப்பட்டால் ஒரு பாலிசி விவரம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
