‘நிர்வாக செலவை குறைக்க’... ‘பிரபல டெலிகாம் நிறுவனம்’... ‘ஊழியர்களை வைத்து’... ‘எடுக்கும் அதிரடி திட்டம்’!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Sep 05, 2019 11:54 AM

நாடு முழுவதும் சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க,  பிரபல டெலிகாம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

BSNL to cut it workforce by half on voluntary basis

மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தும் வருகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் பிரவீன்குமார் பர்வார் எகானமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘போட்டி நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் பணியில் உள்ளனர்.  ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டாலும், ஒரு லட்சம் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். தேவைப்பட்டால் ஒப்பந்த முறையில், ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்றும் அவர் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு, சிறப்பான பணப் பலன்கள் வழங்கப்படும் என்றும் பிரவீன்குமார் தெரிவித்தார்.

Tags : #BSNL #TELECOM