1 மணி 'நேரத்துக்கு' 3.67 கோடி... ஒட்டுமொத்தமாக... '21 ஆயிரம்' கோடியை இழந்த இந்தியா!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Manjula | Dec 31, 2019 11:07 PM

Internet Shutdown: India loses Rs 21000 crores, Report

இணைய முடக்கத்தில் இந்தியா தான் நம்பர் 1 நாடாக திகழ்கிறது. இதனால் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா இழந்துள்ளது.

Indian Council for Research on International Economic Relations-ன் 2018-ம் அறிக்கையின்படி 5 வருடங்களில் சுமார் 21,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு இணைய முடக்கத்தால் மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் இ-காமர்ஸ் தளங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இணையம் துண்டிக்கப்பட்ட ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 3.67 கோடி ரூபாய் இழப்பு அந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல டெலிகாம் நிறுவனங்களும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 2.45 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன.

2018-ம் ஆண்டில் 134 முறையும், 2019-ம் ஆண்டில் 104 முறையும் இணையம் முடக்கப்பட்டுள்ளது. 2012-2017 வரையிலான 5 ஆண்டுகளில் 16,000 மணி நேரம் இணையம் முடங்கி இருக்கிறது. இதனால் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #JIO #AMAZON