‘அமேசான், ப்ளிப்கார்ட்டுக்கு டஃப் கொடுக்கும் ஜியோ'.. வெளியான வேறலெவல் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > வணிகம்By Selvakumar | Dec 31, 2019 03:17 PM
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ மார்ட் என்ற புதிய நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமேசான், ப்ளிப்கார்ட் போன்று ஜியோ மார்ட் என்ற பெயரில் புதிய நிறுவன தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
முதற்கட்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை, தானே, கல்யான் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட் மூலமாக சேவை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ மார்ட் மூலமாக 50 ஆயிரம் பொருள்களை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : #JIO #JIOMART
