'ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ளான்கள்!'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்! முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரிலையன்ஸ் ஜியோவின் ரூபாய் 499 மற்றும் ரூபாய் 777 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ரூபாய் 499 திட்டமானது ஒரு டேட்டா பேக் என்றாலும் ரூபாய் 777 என்பது ஒரு காம்போ திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காம்போ திட்டம் வாய்ஸ் கால் சேவையை வழங்குகிறது. இதர திட்டங்களுடன் ஜியோ நிறுவனம் அதன் பிரபலமான கிரிக்கெட் சலுகைகளையும் மீண்டும் கொண்டுவந்துள்ளது. அதாவது இந்த திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ஐபிஎல் கிரிக்கெட் சீசனை ஹாட்ஸ்டார் வழியாக நேரலையில் காணலாம்
ரூபாய் 499 கிரிக்கெட் திட்டம் ஒரு டேட்டா பேக், ஏனெனில் இதில் எந்த வாய்ஸ் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளும் அனுப்ப இயலாது. அதற்கு மாறாக ரூபாய் 499 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் ஓர் ஆண்டு சந்தாவை இலவசமாக பெறுவதுடன் 56 நாட்களுக்கு 1.5 ஜிபி அளவிலான தினசரி டேட்டா நன்மைகளையும் பெற முடியும்.
ரூபாய் 777 ஜியோ திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் ரூபாய் 399 ரூபாய் மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் ஒரு வருட சந்தாவை, பெறுவதுடன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா தரவு மற்றும் 5 ஜிபி டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை 84 நாட்களுக்கு பெறமுடியும்.
தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வழக்கமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி பிரத்தியேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல், வரம்பற்ற நேரடி விளையாட்டுகள், சமீபத்திய மற்றும் பாலிவுட் மற்றும் சூப்பர்ஹீரோ திரைப்படங்களுக்கான வழக்கமான இலவச சேவைகள் உள்ளிட்டவற்றை பெறமுடியும்.

மற்ற செய்திகள்
