நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் எல்லாம் இனி ‘இலவசமா’ பாருங்க.. அசத்தல் ‘ஆஃபரை’ அறிவித்த ஜியோ..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய போஸ்ட்பெய்டு திட்டங்கள் மற்றும் அதில் இலவச சலுகைகளை அறிவித்துள்ளது.

மாதந்தோறும் ரூ.399 செலுவத்துவதன் மூலம் இலவசமாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஆகியவற்றை பார்க்கலாம். மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக விமானத்தில் செல்லும்போதும் ஜியோ செல்போனை பயன்படுத்தலாம். தற்போது ஐந்து விதமான போஸ்ட்பெய்டு ப்ளான்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
ரூ.399 செலுத்தினால் அன்லிமிடெட் வீடியோ கால்கள், எஸ்எம்எஸ்-களுடன் 200 ஜிபி வரை இன்டர்நெட் பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன் ஜியோசான், ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அடுத்ததாக ரூ.599 ப்ளானில் அன்லிமிடெட் கால்கள், எஸ்எம்எஸ் இதனுடன் ஜியோ போஸ்பெய்டு பேமிலி ப்ளான்படி ஒரு சிம் கார்டு கிடைக்கும். இதனை அடுத்து மூன்று ப்ளான்களின் முறையே ரூ.799, ரூ.999, ரூ.1499 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.999 மற்றும் ரூ.1499 ப்ளான்களில் 500 ஜிபி வரை பெறலாம்.
மேலும் ஜியோ போஸ்டுபெய்டு ப்ளஸ் ப்ளானை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் செல்லும்போது வைஃபை காலிங் வசதியை பெற முடியும். அதேபோல் ஜியோ போஸ்ட்பெய்டு வசிதியை பெற்றிருப்பவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசுலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
