'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'... 'ஏர்டெல் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு'... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இனிமேல் ஏர்டெல் சந்தாதாரர்கள் அதிகப் பணம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும் என, ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்திருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அகில் குப்தாவின் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய சுனில் மிட்டல், ''ஏர்டெல் தற்போது 160 ரூபாய்க்கு 16 ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது. ஆனால் இனிமேல் வாடிக்கையாளர்களால் 1.6 ஜிபி டேட்டாவை மட்டுமே பெற முடியும். அதே போன்று ஏர்டெல் நிறுவனத்தில் குறைந்தபட்ச திட்டமாக உள்ள 45 ரூபாயை, இனி வரும் காலங்களில் 100 ரூபாயாக மாற்றவும் ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சந்தாதாரரிடம் இருந்தும் சராசரியாக 300 ரூபாய் பிளான் தொகையாகப் பெற்றால் மட்டுமே நிறுவனத்தின் நிலைத்த தன்மை உறுதிப்படுத்தப்படும்'' என சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுகுறித்த முன்னறிவிப்பாகவே சந்தாதாரர்கள் அதிகப் பணம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும் என சுனில் மிட்டல் கூறி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
