‘வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி’!.. இலவச ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | May 17, 2021 08:53 AM

வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் பேக் வழங்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Airtel offers recharge pack for free to customers, Details here

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.279, ரூ.179 என்ற இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புடன், ஆயுள் காப்பீட்டு சலுகையையும் வழங்குகிறது.

Airtel offers recharge pack for free to customers, Details here

ரூ.279 திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு, தினமும் 1.5 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4 லட்சத்துக்கான காப்பீட்டு திட்டமும் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் இலவச சந்தா வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Airtel offers recharge pack for free to customers, Details here

இதனை அடுத்து ரூ.179 ரீசார்ஜ் திட்டத்தில், தினமும் 2 ஜிபி அதிவேக 4 ஜி டேட்டா மற்றும் தினமும் 300 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் ரூ.2 லட்சத்துக்கான காப்பீட்டு திட்டமும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ப்ளான்களும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Airtel offers recharge pack for free to customers, Details here

இந்த நிலையில் குறைந்த வருவாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவச ரீசார்ஜ் ப்ளானை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கொரோனா தொற்று காலத்தில் குறைந்த வருவாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கான இலவச ரீசார்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.49 மதிப்பிலான ரீசார்ஜ் கூப்பன், குறைந்த வருவாய் உடைய 5.5 கோடி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை 28 நாட்கள் செல்லும்படியாகும். இதில், ரூ.38 டாக் டைம், 100 எம்.பி., டேட்டா வழங்கப்படும்.

Airtel offers recharge pack for free to customers, Details here

அதேபோல, ரூ.79 கூப்பன் ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும். இதன்மூலம் மொத்தமாக 270 கோடி ரூபாய் மதிப்பிலான பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அடுத்த வாரம் முதல் இந்த பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்’ என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவத்தின் இந்த அறிவிப்பால், அதன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Airtel offers recharge pack for free to customers, Details here | Technology News.