ஏர்டெல் யூஸ் பண்றவங்களுக்கு கிரேட் நியூஸ்...! இனிமேல் 'அந்த' கவலையே வேண்டாம்...! - ஆட்டமடிக்கா அதுவா பண்ணிக்கும்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஏர்டெல் வாடிக்கையாளர்கள் இனி மாத மாதம் ரீசார்ஜ் செய்ய அலையாமல் இருக்க ஏர்டெல் ஆட்டோபே சர்வீஸ் (Autopay Service) எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் ப்ரீபைட் (pre-paid) வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் தற்போது ஆட்டோபே சர்வீஸ் (Autopay Service) எனும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன், ஏர்டெல் நிறுவன ப்ரீபைட் (pre-paid) வாடிக்கையாளர்கள் தங்கள் மாத ரீசார்ஜ் முடிந்த பிறகு மீண்டும் அதே திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டியதிருக்கும். இனி அந்த கவலை தேவையில்லை.
ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ஆட்டோபே சர்வீஸ் (Autopay Service) எனும் வசதி மூலம் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய டெபிட் கார்டுகள் அல்லது கிரெடிட் கார்டுகளைச் சேர்த்து, தன்னுடைய மாத திட்டத்தையும் குறிப்பிட வேண்டும்.
அதன்பின் வாடிக்கையாளரின் தற்போதைய திட்டத்தின் காலாவதி தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், ஏர்டெல் ஆட்டோபே சேவை உங்கள் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பொருத்தமான தொகையை எடுத்துக்கொள்ளும்.
மேலும் இதுகுறித்த தகவல்கள் அனைத்தும் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியாக குறிப்பிட்ட ரீசார்ஜ் சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்படும். மேலும் புதிய ரீசார்ஜ் திட்டத்தின் அனைத்து சலுகைகளும் வாடிக்கையாளரின் தற்போதைய அல்லது பழைய திட்டம் காலாவதியான பின்னரே ஆக்டிவேட் செய்யப்படும். அதேபோல் வாடிக்கையாளர் ஏதேனும் காரணத்திற்காக ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ஆட்டோபே சேவையால் அதிருப்தி அடைந்தால் அல்லது இதை விரும்பவில்லை என்றால், அவர் எப்போது வேண்டுமானாலும் இதை அகற்றலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இனி தன் செல்போன் ரீசார்ஜ் காலியாக போகிறது, தேதி நெருங்கி விட்டதே என்ற கவலையில்லாமல் இருக்கலாம் என ஏர்டெல் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.