’இந்த நகரை ’இரண்டாவது’ தலைநகரமா அறிவிச்சா’... "வருங்காலத்துல 'தமிழ்நாடு' சூப்பரா இருக்கும்"... பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சரின் கோரிக்கை'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் திருமங்கலம் பகுதியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டுமென சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.
அந்த சிறப்பு தீர்மானத்தில், 'இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழக முதலைமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் பணிவான வேண்டுகோளை விடுத்து கீழ்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம். இத்தகைய சூழ்நிலையில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டு மொத்த விருப்பமாக உள்ளது' என்றார்.
மேலும், 'குஜராத் அருகே இருந்தாலும், காந்திநகரில் பாதியும், அகமதாபாத்தில் பாதியும் என அரசு அலுவலர்கள் உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்கள் அமையவுள்ளன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. அந்த வகையில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவித்தால் தென் மாவட்டங்களுக்கு இது வளர்ச்சி வாய்ப்பாக அமையும்' என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
