வந்தாச்சு 'பயோனிக் கண்'...! பார்வை இல்லாதவர்களோட கவலை போயே போச்சு...' அப்படி என்ன இதுல ஸ்பெஷல்...? - டாக்டர்கள் சாதனை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Sep 17, 2020 06:59 PM

இனி பார்வையற்றவர்களும் தங்களை சுற்றி உள்ளவர்களை காண பயோனிக் கண்ணை கண்டறிந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்

doctors find the bionic eye no longerblind around them

உலகிலேயே முதன்முறையாக மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் 'பயோனிக் கண்' என்ற மருத்துவ அறுவை சிகிச்சையை கண்டறிந்துள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சை மூலம் பிறவிலேயே கண் தெரியாதவர்களுக்கும் கண் பார்வை கிடைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

மெல்போர்ன் ஆராய்ச்சியாளர்கள், நீண்ட காலமாக நடத்திய ஆய்வின் முடிவாகவே தற்போது பயோனிக் கண் மூலம் பார்வையற்றோர் இனி இந்த உலகை காண முடியும்.

இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்வோர், தங்கள் தலையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவி ஒன்றை பார்வையற்றோர் அணிந்து கொள்ள வேண்டும். அதில் கேமரா மற்றும் wireless transmitter இருக்கும் எனவும், அவர்களின் மூளையிலும் 9 மி.மீ tiles தொகுப்பு பொருத்தப்பட்டிருக்கும் எனவும் அதன் மூலமே எதிரில் உள்ளவற்றில் இருந்து வரும் சிக்னல் கொண்டு இந்த கருவி செயல்பட்டு சுற்றி உள்ள பொருட்கள் அவர்களது கண்களுக்கு தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயோனிக் கண் செயற்கை உறுப்பு போல செயல்பட்டு அவர்களுக்கு பார்வையை கொடுக்கும். இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், குறைவான பக்க விளைவுகளே ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த கருவிகளை அதிக அளவில் தயாரிக்க நிதியுதவியை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : #EYE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Doctors find the bionic eye no longerblind around them | World News.