![Sandunes Others Sandunes Others](http://www.behindwoods.com/tamil-movies/topbanners-photos/sandunes-others-photos-pictures-stills.jpg)
செல்போன் ஹேக்கிங்.. ஃபேக் ஐடியில் ‘நிர்வாண’ வீடியோ கால்.. அதிரவைத்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளைஞர்களிடம் வீடியோ காலில் பெண் போல பேசி நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![Youth threatens men to make nude video calls, jailed Youth threatens men to make nude video calls, jailed](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/youth-threatens-men-to-make-nude-video-calls-jailed.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம் புலியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் செல்போன்களை ஹேக் செய்வதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். இதனால் பல்வேறு செல்போன் எண்களுக்கு மெசேஜ்களை அனுப்பியுள்ளார். அவர்கள் அந்த மேசேஜை ஓபன் செய்ததும், சம்பந்தப்பட்டவரின் இமெயில் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தனிநபர் ரகசியங்கள் நரேந்திரனுக்கு வந்துள்ளது.
இதைப் பயன்படுத்த பல சமூக வலைதள கணக்குகளை நரேந்திரன் தொடங்கியுள்ளார். இதனை அடுத்து பல இளைஞர்களுடன் பெண் போல் பேசியுள்ளார். அப்போது அவர்களை வீடியோ காலில் நிர்வாணமாக வர கூறி பதிவு செய்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். இதன்மூலம் சுமார் 80,000 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் பறித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நரேந்திரனால் பாதிக்கப்பட்ட திருவள்ளூரை சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நரேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டர். விசாரணையில் மிரட்டி பணம் பறித்ததை நரேந்திரன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)