'அந்த' வீடியோ எடுத்து மிரட்டல்.. கல்லூரி மாணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய பள்ளி மாணவிகள்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவனை, 10 வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் கூலிப்படையை ஏவி கொன்றதாக கூறப்படுகிறது.
தமிழக - ஆந்திர எல்லைப்பகுதி பெரிய ஒபுளாபுரம். இங்கு ஏரிக்கரையோரத்தில் உள்ள குப்பை மேட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக மண்ணில் அடையாளங்கள் உள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கும்முடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ்க்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். வட்டாட்சியர் மகேஷ் முன்னிலையில் சந்தேகத்துக்கிடமான இடத்தில் தோண்டி பார்த்தபோது ஒரு இளைஞரின் சடலம் இருந்தது. கொன்று புதைக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை மீட்ட ஆரம்பாக்கம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
அடையாளம் தெரியாத நபர் என்ற வகையில் கொலை வழக்குப் பதிவு செய்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணையை தொடங்கினர். தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களுக்கு இறந்தவரின் படத்தை அனுப்பி விசாரணை நடந்து கொண்டிருக்கையில் ஓட்டேரி காவல் நிலையத்திலிருந்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வந்தது.
விசாரணை
அதாவது கொலை செய்யப்பட்ட இளைஞர் பிரேம்குமார் என்பதும், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும் ஓட்டேரி காவல்துறையினர் கூறினர்.
என்ன நடந்தது
பிரேம்குமாருக்கும் வண்டலூர் பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுடன் கடந்த ஒன்றை வருடமாக பழக்கம் ஏற்பட்டதாக செல்லப்படுகிறது . இந்த மாணவிகளுடன் அடிக்கடி பிரேம்குமார் தனிமையில் இருந்தாகவும், அதனை வீடியோ எடுத்து வைத்தாகவும் கூறப்படுகிறது. அத்துடன் பிரேம்குமார் அந்த வீடியோவை காட்டி மிரட்டி மாணவிகளிடம் பணம் பறிக்க முயன்றதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகின. மிரட்டலுக்கு அஞ்சி ஒன்றரை லட்சம் வரை கொடுத்த மாணவிகள் அதற்கு மேல் கொடுக்க மனமின்றி மாணவனை கொலை செய்ய திட்டமிட்டனராம்.
அதன்படி பேஸ்புக்கில் பழக்கமான தனது நண்பர் அசோக்குமார் என்பவரின் உதவியுடன் கூலிப்படையை நாடிய மாணவிகள் பிரேம்குமாரை கொல்ல மாணவிகள் திட்டம் தீட்டினராம். கடந்த வியாழக்கிழமை பிரேம் குமாரை தொலைபேசியில் அழைத்த மாணவிகள் கேட்டபடி பணம் தருவதாகவும் எளாவூர் சோதனை சாவடி அருகே வருமாறும் கூறினார்களாம். அதனை நம்பி தனது நண்பர் பிரவீனுடன் அங்கு சென்ற பிரேம்குமாரை கூலிப்படையினர் சுற்றி வளைத்தாக சொல்லப்படுகிறது.
பின்னர் பிரேம்குமாரை இரு சக்கர வாகனத்தில் கடத்திய கூலிப்படையினர் கொட்டா மேடு பகுதியில் தனிஅறையில் வைத்து 2 நாட்களாக சித்ரவதை செய்து மண்வெட்டியால் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு உடலை அந்த பகுதியில் குப்பைமேட்டில் புதைத்துவிட்டு தப்பியதாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.