‘என்ன சத்தம் அது’!.. பதறி போலீஸுக்கு போன் பண்ணிய அக்கம்பக்கத்தினர்.. அம்பத்தூரை அதிரவைத்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென வெடி வெடிப்பதுபோல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தமிழ்ச்செல்வனின் வீட்டுக்குள் சோதனை செய்தனர். அப்போது ஏர்கன் வகையைச் சேர்ந்த 3 துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்த தமிழ்ச்செல்வன், வீட்டிலேயே சுட்டுப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து 3 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
