'வயசு 33'... 'இளம்வயதிலேயே கோடிக்கணக்கான சொத்து'... 'உயிலும் இல்ல, சொத்தையும் அனுபவிக்க முடியவில்லையே'... நெஞ்சை நொறுக்கும் சோகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கோடிக்கணக்கான சொத்துகளை சொந்த காலில் நின்று சம்பாதித்த துடிப்புமிக்க இளைஞரின் மரணம் ஏகப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஃபஹிம் சலே, ஒரு வெற்றிகரமான இளம் தலைமுறை தொழில்முனைபவர் (entrepreneur).
இவர் Slain Tech என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆவார். அதுமட்டுமின்றி, கடந்த 2018ம் ஆண்டு, இவர் Gokada என்ற motorcycle sharing companyஐ நிறுவினார்.
அப்போது, Brooklyn நகரைச் சேர்ந்த 21 வயதான ஹஸ்பில் என்பவர், ஃபஹிம் சலேவிடம் உதவியாளராக இருந்து வந்தார்.
மிக குறுகிய காலத்திலேயே தன்னுடைய தொழிலில் அசுர வேகத்தில் வளரத்தொடங்கினார் ஃபஹிம்.
இதற்கிடையே, தன்னுடைய நிறுவனத்தில் இருந்து, ஹஸ்பில் சுமார் 90 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஃபஹிம் சலேவுக்கு தெரியாமல் ஏமாற்றியுள்ளார்.
இதை ஃபஹிம் ஒரு கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டார். ஆனால், பணத்தை திருப்பி தருவதாக இருவரும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், கடந்த வருடம் ஜூலை 13ம் தேதி, ஃபஹிமை சந்திக்க அவரது அபார்ட்மென்டுக்குச் சென்றுள்ளார் ஹஸ்பில்.
அப்போது ஃபஹிமை கொலை செய்துவிட்டு ஹஸ்பில் தப்பி ஓடிவிட்டார்.
ஆனால், ஃபஹிமின் மரணத்திற்கு பின் தான் காட்சிகள் அனைத்தும் மாறத் தொடங்கின.
33 வயதான ஃபஹிம் இறக்கும் போது, அவருக்கு கிட்டதட்ட 44 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருந்தன. இவை அனைத்தும் அவர் தொழிலில் சம்பாதித்தவை ஆகும்.
தன்னுடைய மரணத்துக்கு பின், தன் சொத்துகளுக்கான வாரிசு யார் என்பதை அவர் உயில் எழுதிவைக்கவில்லை. ஃபஹிம் திருமணம் ஆகாதவர். குழந்தைகள் இல்லை.
எனவே, அவருடைய சொத்துகள் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது.
அவர் சொத்து ஆவணங்கள் தற்போது நியூ யார்க் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நியூ யார்க் சட்டத்தின்படி, ஃபஹிமின் பெற்றோரிடம் அவருடைய சொத்துகள் ஒப்படைக்கப்பட்டன.
இதற்கிடையே, ஃபஹிமின் சகோதரி ரிஃபாயத், தன்னுடைய சகோதரனின் சொத்துகளுக்கு தன்னை வாரிசாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்போது தான் ஃபஹிமின் தொழிலை தொடர்ந்து நடத்து முடியும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், நீதிமன்றம் நடத்திய விசாரணையில், ஃபஹிம் சலேவின் பெற்றோரும், சகோதரியும், அவர் உயிரோடு இருந்த போது அவர் எடுத்த முடிவுகளை எதிர்த்ததாகவும், ஃபஹிமின் தொழில் மீது வெறுப்பு உணர்ச்சி கொண்டவர்களாகவும் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அவ்வாறு இருக்கும் போது, அவர் சம்பாதித்த சொத்துகளை எப்படி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பின்னர், நீண்ட நெடிய வாதங்களை கடந்து, ஃபஹிம் சகோதரி ரிஃபாயத்திடம் 29 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த தீர்ப்பு ஃபஹிம் சொத்துகள் மீதான ஏகபோக உரிமைகளை அவர் குடும்பத்தினருக்கு அளித்துவிடாது.
உயில் இல்லாமல், யாராலும் சொத்துகளை அனுபவிக்கவும் முடியாத சட்ட சிக்கல் உருவாகியுள்ளது.
இளம் வயதில் கனவுகளை நனவாக்கி, வாழ்க்கையில் வேகமாக வளர்ந்து வந்த ஒரு இளம் தொழில்முனைபவரான ஃபஹிம் சலேவின் மறைவும், அதன் பின்னர் நடந்த சொத்து தகராறும் காண்போரை கலங்கடிக்கச் செய்துள்ளது.
இறந்தது ஃபஹிம் மட்டுமல்ல. அவரது கனவுகள் தான்.