பெண் மருத்துவர் வழக்கில்.. என்கவுண்டரில் 'சுட்டு' கொல்லப்பட்டவர்களின்.. 'புகைப்படங்கள்' வெளியீடு
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Dec 06, 2019 06:15 PM
என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக மாபூப்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. முன்னதாக போலீஸ் தரப்பில் சில சம்பிரதாயங்கள் இருப்பதாகவும் அவை முடிந்தவுடன் உடல்கள் எடுத்து செல்லப்படும் என்றும் கூறப்பட்டது.

அதன்படி தற்போது இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளன. இந்தநிலையில் குற்றம் சாட்டப்பட்டு இறந்தவர்களின் கடைசி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Images Of the Encounter.. #hyderabadpolice #TelanganaPolice #EncounterNight pic.twitter.com/Uneg6gXDOP
— Manjari (@mazhil11) December 6, 2019
நால்வர் உடலிலும் துப்பாக்கி காயங்கள் இருக்கின்றன. தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்ததால், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் சுட்டுக்கொன்றதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த என்கவுண்டர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றுதான் என சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
