50 வயதில் 60 ஆவது குழந்தைக்கு தந்தையான நபர்.. "4 வது மனைவியை கல்யாணம் பண்ணி இன்னும்".. வைரலாகும் கதை!!
முகப்பு > செய்திகள் > உலகம்நபர் ஒருவர் 60 ஆவது குழந்தைக்கு தந்தையாக உள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், தற்போது அவர் விருப்பப்பட்டுள்ள விஷயமும் பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | 88 வருட வரலாற்றில் முதல் முறை.. இந்திய அணியில் இடம்பிடித்த கையோடு.. உனத்கட் படைத்த வரலாற்று சாதனை!!
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் சர்தார்ஜான் முகமதுகான் கில்ஜி. மருத்துவராக இருக்கும் இவரருக்கு தற்போது 50 வயதாகிறது. மேலும் இவர் மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் அனைவருடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
அதே போல, முகமது கானுக்கு இதுவரை 59 குழந்தைகள் உள்ளதாகவும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் அவருக்கு 60 ஆவது குழந்தையும் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தனக்கு 60 ஆவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் முகமது கான், இன்னும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள போவதாகவும், 4 ஆவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக் கொண்டு அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தை இன்னும் விரிவாக்கும் திட்டத்தை முகமது கான் கில்ஜி போட்டிருந்தாலும், அனைவருடனும் ஒரே வீட்டில் தங்கவும் அவர் விரும்புவதாக தகவலகள் கூறுகின்றது. இதனிடையே, நாட்டில் பண வீக்கம் சற்று அதிகரித்துள்ளது பொருளாதார ரீதியாக கில்ஜியை பாதித்துள்ளதாகவும் தெரிகிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்ததால் கடந்த 3 ஆண்டுகளாக சற்று சிரமப்பட்டு வருவதாகவும், இருந்தாலும் தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளின் குடும்ப செலவுகளை சரி செய்ய தயாராக இருப்பதாகவும் முகமது கான் கில்ஜி தெரிவித்துள்ளார். அதே போல, அரசு தனது குடும்பத்திற்காக பேருந்து ஒன்றை தந்தால், அதில் அனைத்து குழந்தைகளையும் ஏற்றி பாகிஸ்தான் முழுவதும் சுற்றி வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
60 குழந்தைகள் இதுவரை பிறந்துள்ள நிலையில் இன்னும் நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என விருப்பப்படும் நபர் குறித்த செய்தி தற்போது அதிக வைரலாகி வருகிறது.
Also Read | "மொத்தமா 560 உடல்கள்.." உடல் உறுப்புகளை வைத்து தாய், மகள் செய்த காரியம்.. அமெரிக்காவை நடுங்க வைத்த பின்னணி!!

மற்ற செய்திகள்
