மாசா மாசம் 'ரெண்டு' சதம் அடிக்குற.. இந்த 'கொழந்தை' யாருன்னு கண்டுபுடிங்க?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 18, 2019 04:59 PM

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மயங்க் அகர்வால்(28) அடுத்தடுத்து 2 இரட்டை சதங்களை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

Mayank Agarwal shared his childhood picture on twitter

இதுவரை 8 டெஸ்டில் ஆடியுள்ள மயங்க் அகர்வால்  2 இரட்டை சதம், 1 சதம், 3 அரை சதங்களுடன் 858 ரன்கள் குவித்துள்ளார்.அதோடு ஐசிசி தரவரிசை பட்டியலில் 691 புள்ளிகளுடன் 11-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 8 டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அகர்வால் 8-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மயங்க் அகர்வால் தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு,''சிறுவயது நினைவுகள்,'' என மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் மயங்க் அகர்வாலுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாசா மாசம் ரெண்டு சதம் அடிங்க!

Tags : #CRICKET