‘பாலத்தின் அடியில் படுத்திருந்தவரின் மர்ம உறுப்பு துண்டிப்பு..’ சென்னையில் நடந்த விபரீதம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 05, 2019 02:27 PM

சென்னை மாதவரம் அருகே ரெட்டேரி பாலத்தின் அடியில் படுத்திருந்த ஒருவருக்கு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual predator cuts off mans private part in chennai

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பாலத்தின் அடியில் படுத்திருந்த அஸ்லம்பாஷா என்பவருக்கும் இதேபோல நடந்ததுள்ளது. போலீஸார் நடத்திய விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக தானே அப்படி செய்து கொண்டதாகத் தெரிவித்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மீண்டும் அந்தப் பாலத்தின் அடியில் அதேபோல இன்னொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் பாலத்தின் அடியில் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் அங்கு மதுபோதையில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  போலீஸ் விசாரணையில் அவர், தன்னை ஒரு நபர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாகவும் அதற்கு மறுத்ததால் அந்த நபர் தன்னுடைய மர்ம உறுப்பை துண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரே மாதிரி இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றிருப்பதால் போலீஸார் தனிப்படை அமைத்து இது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #SEXUALPREDATOR #CHENNAI