‘50க்கும் மேற்பட்ட திருமணமான பெண்களை ஏமாற்றிய இளைஞர்..’ மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 03, 2019 11:09 AM

கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலமாக 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

kerala man arrested for sexually exploiting over 50 married women

கோட்டயத்தைச் சேர்ந்த பிரதீஷ் குமார் என்ற அந்த இளைஞர் முதலில் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் நண்பராகியுள்ளார். திருமணமான பெண்களாகப் பார்த்து குறிவைக்கும் இவர் அந்தப் பெண்களின் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அந்தப் பெண்களின் கணவர்களிடம் போலிக் கணக்கிலிருந்து பெண் போல பேசி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இப்படி பெண்களின் நம்பிக்கையை பெற்று அவர்களிடம் நெருங்கியுள்ளார்.

நெருங்கிய பிறகு அவர்களிடம் வீடியோ கால் பேசும் போது அதை ரெக்கார்டு செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்களின் புகைப்படத்தை ஆபாசப் படத்துடன் மார்ஃபிங் செய்து அவர்களுக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். தனது விருப்பத்துக்கு இணங்க மறுத்தால் அவர்களுடைய கணவர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி விடுவேன் எனக் கூறி அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இப்படி 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ள இளைஞரைப் பற்றி பயத்தால் இதுவரை யாரும் புகார் தராமல் இருந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண் தைரியமாக அளித்த புகாரால் இவர் தற்போது பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரதீஷ் குமாரின் செல்ஃபோன், லேப்டாப் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அதிலிருந்து பல பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல்  சம்பவம் போல கேரளாவிலும் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KERALA #SEXUAL #ABUSE