வேலைய விட்டு தூக்கிட்டாங்க ஐயா...! 'TAG பண்ணின பத்தே நிமிஷத்துல...' - அமைச்சரிடம் இருந்து வந்த பதில்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் சூழலில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் மருந்தகங்கள் மற்றும் பால் விநியோகம் தவிர ஏனைய அனைத்து தனியார் நிறுவனங்களும், வங்கி பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது.
மளிகை கடைகளும் மூடியுள்ள நிலையில் காய்கறி விநியோகம் அரசு மூலமே மக்களுக்கு கிடைக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது
அதோடு அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளித்ததோடு, ஊழியர்களை தொழிற்சாலைகளின் வாகனங்களிலேயே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், இரு சக்கர வாகனங்களில் ஆலைகளுக்கு வரவழைக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா ஊரடங்கை மீறும் வகையில், சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தங்களது ஊழியர்களை முழு ஊரடங்கு நேரத்திலும் பணிக்கு வரும்படி சொல்லியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வராவிட்டால் பணி நீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலையில் பணிபுரிவோர் உபயோகிக்கும் வாட்ஸ் அப் குரூப் உரையாடலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ட்விட்டர் பயனர் ஒருவர் ஊழியரின் ட்வீட்டை பகிர்ந்து அதை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் tag செய்திருந்தார்.
ஐயா வேலைய விட்டு தூக்கிட்டாங்க ஐயா .... 😭😭💔
இந்த ஊரடங்கில் எப்படி ஐயா வேலைக்கு செல்வது ?
என்ன சொல்ல போறிங்க எங்கள மாதிரி நடுத்தர மக்களுக்கு
கஷ்டப்பட்டு கிடைத்த வேலை இப்போ இல்லை 💔😭😓#TNLockdown@mkstalin @Udhaystalin https://t.co/h0iJc8lHkD pic.twitter.com/NMESGj9Rti
— V I P E R (@udhay_Tweetzs) May 23, 2021
இது குறித்து அறிந்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பத்தே நிமிடங்களில் பதிலளித்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த விவகாரத்தை எனது பார்வைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Will look into this. Thanks for bringing to my notice.🙏
— Thangam Thenarasu (@TThenarasu) May 23, 2021
அமைச்சரின் இந்த உடனடி பதிலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.