“சர்ச்சை பதிவுக்குரிய கணக்குகளை முடக்குங்க!” - ட்விட்டரை எச்சரித்த மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அவதூறு பரப்பும் ட்விட்டர் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அரசின் போக்குகளை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் ட்விட்டரில் பரவலாக பரவி வருகின்றன. இந்த பதிவுகளில் பல வதந்திகளும் பரப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அரசின் மீது வைக்கப்படும் அவதூறு விமர்சனங்களுடன் இருக்கும் 250 பதிவுகளையும், அவற்றை பதிவிட்ட கணக்குகளையும் நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை ட்விட்டர் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த அறிவுறுத்தலை பின்பற்றாததால், ட்விட்டருக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் அவதூறு பதிவுகளை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இதனிடையே பருவம் தவறிப்பெய்த மழையால் உண்டான பாதிப்புகள் குறித்தும் மத்திய குழு இன்று முதல் ஆய்வு செய்ய தொடங்குகிறது.
அதற்கென 7 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
